பின் கதவால் ராஜபக்சக்கள் கட்டுப்படுத்தி நடாத்திக் கொண்டிருக்கும் நடைமுறை ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்கிறார் சம்பிக்க ரணவக்க.
மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டாகப் போட்டியிடுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனினும், ராஜபக்சக்கள் பின் கதவால் ஆட்சி நடாத்திக் கொண்டிருப்பதை மக்கள் அறிவார்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் அதற்கான சாவுமணி அடிக்கப்படும் எனவும் சம்பிக்க தெரிவிக்கின்றமையும், சமகி ஜன பல வேகய ஊடாக நாடாளுமன்றம் சென்ற சம்பிக்க தற்போது சுயேச்சையாக இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment