பசிலின் 'மொட்டை' வீழ்த்துவோம்: விமல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 28 January 2023

பசிலின் 'மொட்டை' வீழ்த்துவோம்: விமல்!

 


 

எதிர்வரும் தேர்தலில் பசில் ராஜபக்சவின் மொட்டுக் கட்சியை வீழ்த்தப் போவதாக சவால் விடுத்துள்ளார் முன்னாள் பங்காளி விமல் வீரவன்ச.


கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் பெரமுனவின் வெற்றிக்குப் பாரிய அளவிலான பங்காற்றிய விமல் - கம்மன்பில குழுவின் தேனிலவு இரு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வந்திருந்தது.


இந்நிலையில், தம்மைத் தனியாகப் பிரகடனம் செய்து மீண்டுமொரு தேர்தல் களத்தில் குதித்துள்ள விமல் தரப்பு, பசிலின் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதே பிரதான இலக்கென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment