நாடாளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கூட்டத் தொடர், பெப்ரவரி முதல் வாரம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, மார்ச் மாதத்துடன் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றைக் கலைக்கக் கூடும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இம்முறை கூட்டத் தொடர் நிறைவுக்கான சுற்று நிரூபம் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment