ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்பாக தமது தரப்புடன் அவர் செய்து கொண்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென அதிருப்தி வெளியிட்டுள்ளார் பசில் ராஜபக்ச.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கட்சி மட்டத்திலான பிரத்யேக சந்திப்பில் இது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள பசில், எதிர்வரும் தேர்தலில் வெற்றி வேண்டுமானால் தமது ஆதரவு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரமுன - ஐ.தே.க கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ளவுள்ள போதிலும் பெரமுன அதிருப்தியாளர்கள் பாதிப்பை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் இதனை உபயோகிக்க எதிர்க்கட்சிகள் நேசக்கரம் நீட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment