தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி, தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தல் இடம்பெறுமா என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவி வருகிறது. அரசாங்கம், தமது இயலாமையின் நிமித்தம் தேர்தலை நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்களை தேடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
ஏலவே வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவை கலைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றமையும், இருக்கும் உறுப்பினர்கள் விலகா விட்டால் மரணிக்க நேரிடும் என்று, பெரும்பாலும் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment