சவுதி அரேபியா சென்று, இதுவரை சவுதி வழங்கியுள்ள 1.5 பில்லியன் ரியாலுக்கு மேற்பட்ட உதவிகளுக்கு 'நன்றி' கூறியுள்ள இலங்கை அமைச்சர் அலி சப்ரி, கொழும்பின் துறைமுக நகருக்குள் முதலிடவும் சவுதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போன இடத்தில் சவுதியின் 'சகாத்' அமைச்சுடன் இரட்டை வரி தவிர்ப்புக்கான ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ள அமைச்சர், உத்தியோகபூர்வமாக அறியப்படும் 185,000 இலங்கையர்களுக்கு அங்கு தொழில்வாய்ப்பை வழங்கி வருவதற்கும் நன்றி கூறி இன்னும் தொழில்வாய்ப்பைத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் புத்தாக்க எரிசக்தித் துறையில் முதலிட சவுதி ஆர்வத்தினை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment