ஈரானில் இடம்பெற்ற, சர்வதேச பெண்கள் ஆளுமைக்கான மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார் ஷிரந்தி ராஜபக்ச.
ஈரானில் அமுலில் உள்ள 'கலாச்சார' முறைமையைப் பேணி இம்மாநாட்டில் இவர் கலந்து கொண்டுள்ளதுடன் நைஜீரியா, சிரியா, ஆர்மேனியா, சேர்பியா உட்பட்ட ஏனைய நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தர்களின் துணைவியரே இந்நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.
இலங்கையின் 'தற்போதைய' முதற்பெண்மணி மைத்ரி விக்ரமசிங்க கல்வியியலாளர் மாத்திரமன்றி ஆர்ப்பாட்டமில்லாத மனித நேய தொண்டுகளிலும் வெகு காலமாக ஈடுபட்டு வரும் சிறந்த ஆளுமையாவார். எனினும், இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியாரே அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment