தேர்தல் ஆணைக்குழு கலையப் போகிறது: டிலான் - sonakar.com

Post Top Ad

Friday 27 January 2023

தேர்தல் ஆணைக்குழு கலையப் போகிறது: டிலான்




தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் சிலர் விலகவுள்ளதாக தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.


இப்பின்னணியில், தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவொன்று இல்லாத சூழ்நிலை உருவாகும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். மூன்று உறுப்பினர்கள் இருந்தால் தேர்தலை நடாத்தலாம் என ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்திருந்த நிலையில், பெரும்பாலும் தேர்தல் ஆணைக்குழு கலையும் என டிலான் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.


தேர்தலை பின் போடுவதற்கு, அரசாங்கம் அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருவதுடன், தனது நாடாளுமன்ற பதவியை 'தியாகம்' செய்த முஜிபுர் ரஹ்மான், தேர்தலை நடாத்த உத்தரவிடுமாறு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment