அரச மற்றும் தனியார் துறையினர் மாதாந்த ஊதியத்தை வழங்க சிரமங்களை எதிர் நோக்கி வரும் நிலையில், ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கிறார் கம்மன்பில.
பொதுவாக, மாதாந்த சம்பளம் பெறுவோர் முதல் மூன்று வாரங்களிலேயே கடனாளியாவதாகவும் இதனால் அடுத்த மாத ஊதியத்தில் கடனையடைக்க சிரமப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், பெரும்பாலான மேற்குலக நாடுகளில் போன்று வாராந்தம் அல்லது இரு வாரத்துக்கொரு முறை ஊதியம் வழங்கும் நடைமுறை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment