எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டணியினரது பிரச்சார நடவடிக்கைகளில் தாம் பங்கெடுக்கப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு தவிசாளராக இயங்குவதைத் தவிர வேறு எதுவித நடவடிக்கைகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கும் ரணில், 40 வீத புது முகங்களை அறிமுகப்படுத்துமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி பதவியிலிருப்பதால் கட்சி சார்பு பிரச்சாரங்களிலிருந்து தவிர்த்துக் கொள்ள ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment