கோட்டாபயவை விசாரிக்க நீதிமன்ற உத்தரவு - sonakar.com

Post Top Ad

Friday 13 January 2023

கோட்டாபயவை விசாரிக்க நீதிமன்ற உத்தரவு

 



மே 9 வன்முறையைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டிருந்த 19 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரித்து, வாக்குமூலம் பெற உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


குறித்த தொகை பணம் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணம் பதுக்கப்பட்டிருந்ததன் நோக்கம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகிறது.


இந்நிலையிலேயே, கோட்டை நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளமையும் கோட்டாபய ராஜபக்ச, டுபாயில் விடுமுறையைக் கழித்து விட்டு நாடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment