ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனியார் வழக்கின் பிரதிவாதியான மைத்ரிபால சிறிசேனவை, எச்சரித்து பிரதிவாதி கூண்டில் ஏற்றியுள்ளார் கோட்டை மஜிஸ்திரேட் திலின கமகே.
குறித்த வழக்கில், மைத்ரிபால சிறிசேன பிரதிவாதிக் கூண்டில் ஏற வேண்டிய அவசியமில்லையென அவரது சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதாடிய போதிலும், மேல் நீதிமன்றம் வழக்கை இன்னும் தள்ளுபடி செய்யவில்லையெனவும் குற்றச்சாட்டுகளை கேட்பதற்கு மைத்ரிபால கூண்டில் ஏறியாக வேண்டும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
இப்பின்னணியில், மைத்ரி கூண்டில் ஏறி, தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை செவி மடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான அனைத்து புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் நடவடிக்கையெடுக்க மறுத்ததாக மைத்ரிக்கு எதிராக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment