'கூட்டுறவு' நாடி சவுதி செல்கிறார் அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Saturday, 21 January 2023

'கூட்டுறவு' நாடி சவுதி செல்கிறார் அலி சப்ரி

 



இலங்கை - சவுதி அரேபியா இடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் சவுதிக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி.


ஜனவரி 23 முதல் 27ம் திகதி வரை ஓ.ஐ.சி, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, வளைகுடா நாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பு மற்றும் மக்கா - மதீனா ஆளுனர்களையும் சந்தித்து 'கூட்டுறவு' பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற விழாவில் ஜனாதிபதி 'சிறப்பாக' பேசியதை மக்கள் மெச்சிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment