தனக்கு சொந்தமாக மோட்டார் சைக்கிள் ஒன்று கூட இல்லையென விளக்கமளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் என்பதால் தற்போது பணம் சேகரிப்பதற்கு வழி தேடுவதாக தெரிவிக்கும் அவர், இதற்கென ஒரு குழு அமைத்து நாடு பூராகவும் நிதி சேகரிக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார்.
தந்தை விட்டுச் சென்ற 3 ஏக்கர் காணியில் மாந்தோப்பு ஒன்று உள்ளதாகவும் அதில் வரும் வருவாயே தனக்கானது எனவும் தெரிவிக்கும் அவர், அதைத் தவிர வேறு பணம் தன்னிடம் இல்லையெனவும் கூடுதல் விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment