பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமசிங்கவை நீக்கி, அந்த இடத்தை அரசியல் பலத்தினூடாக கைப்பற்றுவதற்கு சிரேஷ்ட டி.ஐ.ஜி ஒருவர் முயற்சி செய்வதாக விக்கிரமசிங்க விசனம் வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் என்கிற இடத்துக்கு வருவதற்கான ஒழுங்கு முறை இருப்பதாகவும், அதனை மீறி அரசியலைப் பயன்படுத்த முயல்வதாகவும் விளக்கமளித்துள்ள அவர், தமது பதவிக் காலம் நீடிக்கப்பட்டு விடுமா என்பதை அச்சத்துடன் ஒரு சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாட்டில் ஈடுபடும் சிரேஷ்ட டி.ஐ.ஜி, தனது ஜாதகத்தின் பிரதியையும் எடுத்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவிக்கினறமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment