2009 உள்நாட்டு யுத்த நிறைவின் பின்னரும் இலங்கையை இனவாத அரசியலுக்குள் தள்ளிக் குளிர் காய்வதற்கு முயன்ற சக்திகள் அண்மைய பிரளயத்தின் பின்னரும் தொடர்ந்தும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மக்களால் புரட்சியால் பதவி நீங்க நேர்ந்த கோட்டாபய ராஜபக்ச ஊடாக 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற போர்வையில் அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஞானசார, மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஊடாக, கரு ஜயசூரியவினால் கடந்த வருடம் முன் வைக்கப்பட்ட 'ஜன சபா' திட்டத்தில் தலையிட முயற்சி செய்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இப்பின்னணியில், குறித்த நபர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் குறித்த திட்டத்தை செயற்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையும் ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணியின் தலைமைப் பதவி வகித்த காலத்தில் தொலைபேசி மிரட்டல்கள் ஊடாக ஞானசார தனது 'வேட்கையைத்' தீர்த்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment