எதிரும் புதிருமாக இருந்த காலத்தில் மேடைகளில் தானும் ரவுப் ஹக்கீமும் ஒருவரையொருவர் வசை பாடிக் கொண்டது அக்காலத்தில் தேவைப்பட்ட அரசியல் பேச்சு என்கிறார் முஸ்லிம் காங்கிரசுடன் ஐக்கியமாக முயன்று வரும் ஹிஸ்புல்லா.
ரவுப் ஹக்கீம் வெட்கமில்லாத பைத்தியகாரன் என ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லா மிகப் பெரும் அண்டப் புளுகன் என ஹக்கீமும் கடந்த காலங்களில் வர்ணித்துக் கொண்டிருந்த அதேவேளை, இரு தரப்பும் எதிரும் புதிருமாக இயங்கிய போது பல்வேறு வசைபாடல்கள் இடம்பெற்றிருந்தது.
எனினும், தற்போது உள்ளூராட்சி தேர்தலில் 'இணைந்து' செயற்பட முயற்சி செய்து வரும் கடந்த தேர்தல்களில் தோல்வியுற்ற ஹிஸ்புல்லா, புதிதாக இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment