பொது சேவை ஊழியர்களுக்கு இம்மாதம் ஊதியம் வழங்குவதற்குத் தேவையான நிதி கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய.
இம்மாதம் 25ம் திகதி அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துள்ள அவர், இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
எனினும், நிர்வாக மட்டத்தில் பணி புரிவோருக்கு 'ஒரு நாள்' தாமதமாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment