1970ம் ஆண்டு முதல் தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் வாழ்ந்து வந்த முதலை மரணித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது மிருகக் காட்சி சாலை நிர்வாகம்.
கியுபாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த குறித்த முதலையை தனியார் ஒருவர் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்திருந்த நிலையில் 1970ம் ஆண்டு அதனை மிருகக் காட்சி சாலைக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது ஆயுட்காலத்தை முதலை நிறைவு செய்துள்ளதாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளமையும், நாட்டைக் கொள்ளையிடும் பெரும் முதலைகள் தொடர்ந்தும் சுதந்திரமாக வாழ்வதாக மக்கள் கருத்துப் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment