2023ம் ஆண்டில் ஆட்சியதிகாரத்திலி ஜே.வி.பி பாரிய செல்வாக்கு செலுத்தும் சக்தியாக இருக்கும் என அக்கட்சியினர் வெகுவாக நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்திற்குத் தள்ளிய கடந்த கால ஆட்சி முறைமைகளுக்கான ஒரே மாற்றுத் தீர்வென தம்மை முன் மொழியும் அக்கட்சியினர் அதற்கான பிரச்சார நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.
இடர் காலத்தில் மாத்திரமே 'நியாயங்களை' பற்றி சிந்திக்கும் பெருவாரியான மக்கள், ஜே.வி.பியினரின் சமூக நீதிகளை அத்தருணங்களில் விரும்புகின்ற போதிலும் தேர்தல் காலங்களில் கவர்ச்சி அரசியலுக்கே முன்னுரிமை வழங்கி வருகின்றமையும், ஜே.வி.பியினரும் இதற்கு முன் கிடைத்த வாய்ப்புகளை நிலைப்படுத்த தவறிய வரலாற்றைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment