மே 9 வன்முறையின் போது, தம்மை யாராவது தாக்கியிருந்தால் 15 - 20 பேரை தான் சுட்டுக் கொன்றிருக்கக் கூடும் என தெரிவிக்கிறார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசந்த.
குறித்த சந்தர்ப்பத்தில் தாம் அலரி மாளிகையில் இருந்தாகவும் இரண்டு துப்பாக்கிகளை எடுத்து தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறைக்குத் தூண்டியதாக பெரமுனவின் சனத் நிசந்த மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்த அதேவேளை அவரது வீடும் தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment