ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவருக்காக புறக்கோட்டையில் பிச்சையெடுத்து பணம் சேர்த்து வழங்கியுள்ளார் அவரது ஆதரவாளர்.
நேற்றைய தினம் இவ்வாறு புறக்கோட்டையில் சேர்த்த பணம் ரூ. 1810 இனை மைத்ரியிடம் கையளித்துள்ள அவரது ஆதரவாளரும் கலைஞருமான சுதத்த திலகசிறி, மைத்ரி 'அப்பாவி' யெனவும் அவரிடம் பணம் இல்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
இந்த பிச்சை பணத்தை மைத்ரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment