எதிர்வரும் வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க.
வரவு - செலவுத் திட்ட பேரங்களின் பின்னணியில் அமைச்சரவையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் அதேவேளை, பெரமுன தரப்பினரின் நெருக்குதலால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதோடு ஜனாதிபதி தேர்தலையும் நடாத்தும் சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை மாற்றங்களின் போது மேலதிகமாக 10 அமைச்சுப் பதவிகளை பெரமுனவினர் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment