ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அக்கட்சியினர், நாடளாவிய ரீதியிலான அமைப்பாளர்களை நேர்முக தேர்வூடாக நியமிப்பதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.
இப்பின்னணியில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போதைய சிரேஷ்ட தலைவர்களினால் நேர்முக தேர்வு நடாத்தப்பட்டு வருகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அளவில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரு நாடாளுமன்ற தேசிய பட்டியல் ஊடாக பெற்றுக்கொண்டிருந்தமையும், அதனூடாக நாடாளுமன்றம் சென்ற ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக அதிகாரத்தில் வீற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment