UNP - SLPP 'கூட்டணி' அமைப்பது தொடர்பில் ஆராய்வு - sonakar.com

Post Top Ad

Monday, 12 December 2022

UNP - SLPP 'கூட்டணி' அமைப்பது தொடர்பில் ஆராய்வு




எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி - பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது குறித்து இரு தரப்பினரும் ஆராய்ந்து வருகின்றனர்.


கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, கிடைக்கப் பெற்ற தனியொரு தேசியப் பட்டியலினால் தற்சமயம் 'தலை நிமிர்ந்து' இருப்பதாக கருதுகிறது. இதேவேளை, கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டாலும் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பெரமுன முனைப்பாக செயற்படுகிறது.


இப்பின்னணியில் தற்சமயம் ஜனாதிபதி பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, அடுத்த தேர்தலில் தோல்வியைத் தவிர்ப்பதற்கான வியூகங்கள் குறித்து பங்காளிகளுடன் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment