எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் சமகி ஜன பல வேகய காணப் போகும் பாரிய வெற்றியைக் கணித்து, இப்போதே அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் லக்ஷமன் கிரியல்ல.
தேர்தலை முன்னிட்டு உருவாகியுள்ள சமகி பல கூட்டணியைத் தவிர்த்து, ராஜபக்ச குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்த யாரையும் தமது கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளப் போவதில்லையெனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
எனினும், மே 9 சம்பவங்கள் இடம்பெற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் வழமையான மறதியுடன் அரசியல் விவகாரங்களை 'பழைய' முறைமையிலேயே கணித்து, சமூக வலைத்தளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment