எதிர்வரும் வருடம் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஜே.வி.பி தரப்பினர் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட கால கட்சித் தலைவரான அநுர குமார திசாநாயக்கவை தேசிய மக்கள் சக்தி (NPP) யின் தலைவராகத் தொடர்கின்ற அதேவேளை, ஜே.வி.பியின் தலைமைத்துவத்தை பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, செயலாளர் பதவியையும் விஜித ஹேரத்துக்கு வழங்கி மாற்றங்களைக் கொண்டு வர முயல்கின்றமையும், இடர் காலங்களில் ஜே.வி.பியின் பேச்சுக்களை ரசிக்கும் மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிக்கத் தவறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment