10 பில்லியன் ரூபாவுக்குள் எதிர்வரும் வருடம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்தத் தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது தேர்தல் ஆணைக்குழு.
ஜனவரி முதல் வாரத்தில் வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள அதேவேளை மாவட்ட செயலாளர்களிடம் அனைத்து பொறுப்புகளும் விளக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைக்காக 2 லட்சத்துக்குக் குறைவானவர்களே பணியிலமர்த்தப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வார இறுதியிலேயே தேர்தல் நடாத்தப்படுவதால் செலவு அதிகம் எனவும் இம்முறை வார நாளொன்றில் தேர்தலை நடாத்தி 10 பில்லியன் ரூபாவுக்குள் அனைத்து செலவுகளையும் உள்ளடக்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment