இரட்டைப் பிரஜாவுரிமை சிக்கலில் சிக்கியுள்ள டயானா கமகே, சமகி ஜன பல வேகய கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அப்பதவிகளை வகிக்கத் தகுதியில்லையெனக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இன்னொரு கட்சியின் உறுப்பினர்களான இவ்விருவரும் அக்கட்சி (ஐ.தே.க) உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக ஏலவே வழக்காடி வருவதாகவும் ஆதலால் அவர்கள் அக்கட்சியின் உறுப்பினர்களே எனவும் தமது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.
இப்பின்னணியில், பிறிதொரு கட்சியின் உறுப்பினர்களாக இருந்து கொண்டு சமகி ஜன பல வேகயவின் தலைவராகவும் செயலாளராகவும் செயற்பட முடியாது என அவர் தொடர்ந்துள்ள வழக்கின் பின்னணியில் குறித்த இருவரையும் எதிர்வரும் ஜனவரி 25ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment