மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் ஊழியர் ஒருவரை தகாத முறையில் பேசி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதன் பின்னணியில் 27 வயது இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நிலையத்துக்கே சென்று இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதாக குறித்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உஸ்ஸ்பிட்டியவில் வசிக்கும் குறித்த நபர் இராணுவ சிப்பாய் என கண்டறியப்பட்டுள்ளதுடன் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment