வயதாகும் மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை விடுவித்து வீடுகளுக்கு அனுப்ப அரசு திட்டம் தீட்டி வருவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.
இவ்வாறான அடிப்படைகளில் சிறைகளிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய கணிசமான கைதிகள் இருப்பதாகவும் ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையின் சிறைகளில் இடப்பற்றாக் குறை நிலவுவதுடன் அடிப்படை வசதிகளற்ற சூழலும் நிலவுவதாக பல்வேறு ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment