சமய நிலையங்களுக்கு சூரிய ஒளி மூல மின்சார உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர.
5 KW மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் திறனுள்ள இவ்வுபகரணங்கள் மூலம் 650 அலகுகள் பாவனையைப் பெற முடியும் எனவும் பெரும்பாலான சமய நிலையங்கள் (பௌத்த) இந்த அளவையே பயன்படுத்துவதாகவும் ஆதலால் மின் கட்டணம் இல்லாது போகும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
குறைந்த வருமானம் உள்ள சமய நிலையங்களே தேர்ந்தெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment