அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளுங்கட்சிக்குள் பதவிக்கான பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதோடு புதிதாக இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது 'ஆசைகளை' வெளியிட்டு வருகின்றமையும், மக்கள் போராட்டத்தையும் மீறி தொடர்ந்தும் ஆளுங்கட்சியாக இருக்கும் பெரமுன, எஞ்சியிருக்கும் காலத்தை முதலீடாக்கி அடுத்த தேர்தலில் வெல்வதற்கு திட்டமிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment