நாட்டின் இன்றைய நிலைமையில் மாணவர்கள் பாடசாலை உபகரணங்களைக் கூட வாங்க முடியாத சூழலில் தவிப்பதாகவும் இப்படியான நேரத்தில் வீதிக்கு இறங்கி மக்களுக்கு முகங்கொடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்ற பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர, தாம் அரசைக் கை விடத் தயாராகி விட்டதாக தெரிவிக்கிறார்.
பாடசாலை மாணவர் எதிர் நோக்கும் இப்பிரச்சினை குறித்து அதிகாரத்தில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடாத்தியும் எவ்வித பயனும் இல்லையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் பாடசாலை மாணவர்க்கான சீருடையும் சீனாவிடமிருந்து கடன் நன்கொடையாகப் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment