தனியார் வைத்தியசாலைகளில் சட்டவிரோதமான முறையில் கிட்னி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலின் பிரதான முகவர் என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பிரபலமாக இருந்த உடற்பாகங்கள் திருட்டு, இலங்கை தனியார் வைத்தியசாலைகளிலும் இடம்பெற்று வருவது குறித்து கடந்த இரு வருடங்களாக தகவல்கள் வெளியாகி வருவதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முகவரை 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment