சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை; பிக்கு கைது - sonakar.com

Post Top Ad

Monday, 19 December 2022

சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை; பிக்கு கைது

 



இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வந்த 'ஆண்' நபர் ஒருவருக்கு பாலியல் தொல்லை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பிக்கு ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் மிஹிந்தலயில் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள பிக்கு அப்பகுதியின் பிரதான விகாரையில் பணியாற்றி வருவதுடன் குறித்த நபருக்கு 69 வயது எனவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


புனித பூமியை தரிசிக்க வந்த 46 வயது நபர் ஒருவரே இவ்வாறு பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment