கட்சியென்ற அடிப்படையில் தமது தரப்பு செய்த 'பிழைகளை' திருத்திக் கொண்டு மீளவும் போட்டியிட்டு, மக்கள் ஆணையைப் பெறப் போவதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
மீண்டும் மக்கள் தமது கட்சியினை அங்கீகரிப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள நாமல், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக் கூடிய தார்மீகப் பணியை செய்யக் கூடிய 'தகுதி' தமது தரப்புக்கே இருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மே 9ம் திகதி வன்முறையையடுத்து நாமலின் தந்தையும் சிறிய தந்தையும் தமது பதவிகளைத் துறக்க நேரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment