வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் அனுமதிப் பத்திரம் இல்லாமல் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான 'டுபாய் சுத்தா' என அறியப்படும் நிசந்த பிரியதர்சனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குற்றஞ்சுமத்தியிருந்தது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் ஊடாக தொழில் வாய்ப்பை பெறுபவர்களுக்கே பல்வேறு 'சட்ட ரீதியான' சலுகைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment