தற்போது அமுலில் இருக்கும் மாகாண ரீதியிலான வாகன இலக்கத் தகட்டின் குறியீட்டு முறைமையை மாற்றப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி முதல் மாகாண ரீதியிலான ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையினால் வாகனங்கள் விற்கப்படும் போது மாகாணங்களுக்கிடையிலான மாற்றங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் இவற்றைத் தீர்க்கவே இம்மாற்றம் அமுலுக்கு வரப்போவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment