முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் அமெரிக்கா பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு ஏதுவாக தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, மே 9 வன்முறையின் பின்னணியில் நாட்டை விட்டு தப்பியோடி ஜனாதிபதி பதவியையும் கைவிட்டிருந்தார்.
எனினும், இலங்கைக் கடவுச்சீட்டில் வேறு எங்கும் பயணிக்க முடியாத நிலையில், பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு நாடு திரும்பிய அவர், தற்போது குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்வதும், அவரது மகன் மற்றும் பசில் குடும்பத்தினர் தொடர்ந்தும் அமெரிக்க பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment