அரசை தவறாக வழி நடாத்தி இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து மருந்து வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அதனை நிரூபித்தால் தாம் பதவி விலகத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு தவறென தெரிவிக்கும் அவர், இந்தியாவின் கடன் ஒப்பந்தத்துக்கு அமைவாக அங்கிருந்து மருந்துகளை பெற்றுக் கொள்ளவே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment