ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி யமீனுக்கு 11 வருட சிறைத்தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்துள்ளது மாலைதீவு நீதிமன்றம்.
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் யமீன் 2018 தேர்தலில் தோல்வியுற்றிருந்தார். இந்நிலையில், தற்போது அவரது வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டும் அதிகார துஷ்பிரயோகத்தின் ஊடாக வருமானம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பின்னணியில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமையும் இலங்கையில் முன்னாள் - இந்நாள் ஆட்சியாளர்கள் மீது வருடக் கணக்கில் குற்றச்சாட்டுகள் மாத்திரம் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment