சீமெந்து இறக்குமதி செய்யும் மாபியாக்களினால் அதிக விலைக்கு சீமெந்து விற்கப்படுவதாகவும் அதனை ஆகக்குறைந்தது 1000 ரூபாவால் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கிறார் தேசிய கட்டிட நிர்மாண சங்கத் தலைவர் சுசந்த லியானாராச்சி.
அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர், டொலர் பிரச்சினையை முன் வைத்து, மாபியாக்கள் ஏகத்துக்கும் விலையை அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை எதிர் நோக்கி வரும் பொருளாதார சிக்கலின் விளைவுகள் 2023ம் ஆண்டிலும் தொடரும் என எதிர்வு கூறப்படுவதோடு வரும் வருடம் மார்ச் - ஏப்ரல் மாதமளவில் பாரிய அளவிலான மின் வெட்டு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment