இலங்கை - இந்தியா இடையே 'கப்பல்' பயணம் - sonakar.com

Post Top Ad

Monday, 19 December 2022

இலங்கை - இந்தியா இடையே 'கப்பல்' பயணம்

 



யாழ். காங்கேசன்துறையிலிருந்து தென்னிந்தியாவின் புதுச்சேரிக்கு பயணிகளைக் கொண்டு செல்லும் கப்பல் வேவை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.


இதற்கேற்ப குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுமான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் நிமல் விளக்கமளித்துள்ளார்.


300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் அமையும் குறித்த பயணம் 3 முதல் 3.5 மணி நேரத்தில் கரையை அடையும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment