தற்சமயம், தற்காலிகமாக அமைதி பேணும் பொது பல சேனாவின் ஞானசாரவுக்கு அமெரிக்காவில் குடியிருக்கும் வைத்தியர் ஒருவர் ஊடாக சொகுசு வாகனம் ஒன்று 'நன்கொடையாக' வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஞானசாரவைத் 'தேடித் தேடி' நன்கொடை வழங்குவோர் கடந்த காலங்களிலும் அறியப்பட்டிருந்தனர். இத் தொடர்ச்சியில் தற்சமயம் ஞானசாரவுக்கு டொயோடா வீ8 ரக வாகனம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவினால் ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார நியமிக்கப்பட்டதையடுத்து சமூக அந்தஸ்த்தை அவர் உயர்த்திக் கொண்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment