குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த, அரச அல்லது முற்றிலும் இலவசமாக தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் 2024ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தேற்றும் மாணவர்க்கு மாதாந்தம் 5000 ரூபாவை வழங்குவதற்கான ஜனாதிபதியின் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வலயத்திலிருந்து 30 மாணவர் தெரிவு செய்யப்பட்டு, 24 மாதங்களுக்கு புலமைப்பரிசிலாக வழங்கப்படவுள்ளதாகவும் 2021ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து 2024ம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கு தேற்றவுள்ள மாணவரே தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்களிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்று, எதிர்வரும் 23ம் திகதிக்குள் கிராம சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment