இலங்கையின் தேசிய விமான சேவையும், தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிறுவனமுமான ஸ்ரீலங்கன், இவ்வருடம் செயல்பாட்டு இலாபமாக 6000 மில்லியன் ரூபாவைக் கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கையிருப்பில் இருக்கும் விமானங்கள் சிலவற்றின் குத்தகை விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் 11 விமானங்கள் வரை குத்தகைக்கு எடுப்பதற்கான அனுமதியையும் அமைச்சரவை வழங்கியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச அரசின் கடும்போக்கு நடவடிக்கைகளினால் எமிரேட்ஸ் விமான சேவையுடன் இருந்த கூட்டுறவு முறிந்ததிலிருந்து ஸ்ரீலங்கன் தொடர்ச்சியாக இழப்பை சந்தித்து வருவதாக இதுவரை தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment