சுங்க வரி ஏய்ப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையைக் குறைத்து உத்தரவிட்ட முன்னாள் நீதிபதியொருவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
காலி மஜிஸ்திரேட்டாக பணியாற்றிய டி.எஸ். மிரிஞ்சியாராச்சிக்கு எதிராகவே கொழும்பு மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. 7500 ரூபா அறவிட வேண்டிய இடத்தில் அதனை 1500 ரூபாவாக குறைத்ததுடன் அபராதத் தொகை 5000 ரூபாவை 2500 ரூபாவாக குறைத்ததன் பின்னணியில் சட்டமா அதிபரினால் இவ்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இல்லாத நிலையிலேயே வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் 22500 ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment