நாட்டில் நிலவும் முட்டைத் தட்டுப்பாட்டினால் கேள்வி அதிகரித்து, விலையும் ஏகத்துக்கும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இதற்கான தீர்வொன்றை முன் மொழிந்துள்ளது.
தற்காலிகமாக வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதியை மேற்கொள்வதே அத்தீர்வென தெரிவிக்கும் குறித்த சங்கம், இதனூடாக முட்டையொன்றின் விலையை ரூ. 30 ஆகக் குறைக்கலாம் எனவும் விளக்கமளித்துள்ளது.
தற்சமயம் பல்வேறு நாடுகளில் முட்டைத் தட்டுப்பாடு தாக்கம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment