கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கி அதனூடாக கஞ்சா ஏற்றுமதி செய்து, நாட்டுக்கு டொலர் கொண்டு வரும் திட்டத்தினை முன்னெடுக்கும் அரசு, அனுமதிப்பத்திரத்துக்கு மூன்று கோடி ரூபாய் அறவிட ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுர்வேத 'மருந்து' தேவைக்காக மாத்திரமே இலங்கையிலிருந்து கஞ்சாவை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப் போவதாகவும் உணர்வுபூர்வமான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கஞ்சா வளர்ப்பு மாத்திரமன்றி இரவு நேர கேளிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும் அரசின் பங்காளிகள் குரல் கொடுத்து வருகின்றமையும் ஏலவே பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையில் கைதாகும் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment